வாலிபர் தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மகாசக்திநகரை சேர்ந்தவர் நாகரெத்தினம் மகன் குமரகுரு (வயது 35). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். 35 வயதாகியும் தனக்கு திருமணமாகவில்லையே என விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குமரகுரு இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story