இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை
தொண்டி
திருவாடானை தாலுகா ஓரியூர் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 55). இவரது மகள் வினிதா(26). இவருக்கும் தொண்டி அருகே உள்ள கலியநகரி கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன்(29) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று வினிதா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. பட்டினம் போலீசார் வினிதாவின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வினிதாவிற்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆகியிருப்பதால் இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக எஸ்.பி. பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினிதாவிற்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.