வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் திரவியநாதபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி முருகன் (வயது 36). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று அதில் ரூ.6 ஆயிரத்தை திருப்பி செலுத்தி விட்ட நிலையில் மீதம் ரூ.4 ஆயிரத்தை கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தினர் சங்கிலி முருகனின் வீட்டிற்கும், அவர் வேலை பார்த்த இடத்திற்கும் சென்று கடனை கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சங்கிலி முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சங்கிலி முருகனின் மனைவி திலகவதி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சங்கிலி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சங்கிலி முருகனின் சகோதரர் மோகன் (33) கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்



Next Story