வாலிபர் தற்கொலை
போடியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
போடி டி.வி.கே.கே. நகரைச் சேர்ந்தவர் சங்கர்சிங் (வயது 32). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் ேநாய் குணமாகவில்லை. இந்நிலையில் இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை தாகூர்சிங் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story