வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(61). இவருடைய இளைய மகன் மகேந்திரன்(35). இவருக்கும், இவருடைய மனைவிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்ததாகவும் தெரிகிறது. இரவில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மகேந்திரன் தூக்கில் தொங்கியுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story