இளம்பெண் பலாத்காரம்; வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பாலியல் பலாத்காரம்
நெல்லை மாவட்டம் வெள்ளாளன்குழியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மகன் தியாகராஜன் (வயது 27). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், தியாகராஜனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
12 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தார்.இதனை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.