வீடுகளில் புகுந்து திருடிய வாலிபர் கைது


வீடுகளில் புகுந்து திருடிய வாலிபர் கைது
x

திசையன்விளை அருகே வீடுகளில் புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள மருதநாச்சி விளையை சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மனைவி முத்து ஈஸ்வரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு அருகில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் இருந்த தங்க கம்மல்கள், 3 ஜோடி வெள்ளி கொலுசுகள், வெள்ளிக்கொடி, ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் விஜய அச்சம்பாடு கீழத்தெருவை சேர்ந்த கவிதா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த பீரோவை கள்ளச்சாவி போட்டு திறந்து பீரோவில் இருந்த செல்போன், ரூ.1000 திருடு போய்விட்டதாக திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் திசையன்விளையை அடுத்த அந்தோணியார்புரம் மேலத்தெருவை சேர்ந்த தேவ ஆசீர்வாதம் மகன் தனசிங் (வயது 33) என்பவர் திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து திருட்டு போன பொருட்களை மீட்டனர்.


Next Story