போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது


போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
x

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் பசுபதிபாளையம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பசுபதிபாளையம் தெற்கு தெரு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 35) என்பவர் போதை மாத்திரை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 64 கிராம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மகேந்திரன் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story