கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

தஞ்சையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை வடக்குவாசல் பகுதியில் மேற்கு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் வடக்கு வாசலை சேர்ந்த சூர்யா (வயது 23) என்பதும், கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story