கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் உழவர் சந்தை அருகில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், விழுப்புரம் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் சூர்யகுமார் (வயது 22) என்பதும் இவர் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூர்யகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story