திருவண்ணாமலையில் கடைகளுக்கு குட்கா விற்ற வாலிபர் கைது


திருவண்ணாமலையில் கடைகளுக்கு குட்கா விற்ற வாலிபர் கைது
x

திருவண்ணாமலையில் கடைகளுக்கு குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பண்டல்களில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதன் மொத்த எடை 45 கிலோ. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளிடம் விசாரணை செய்த போது சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் குட்கா பண்டலை கடையில் வைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து போலீசார் சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்தியதில் அங்கு பெட்டி கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த பக்காரம் (வயது 30) என்பவர் குட்கா பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து, 45 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story