போதை காளான் விற்ற வாலிபர் கைது


போதை காளான் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 July 2022 9:10 PM IST (Updated: 4 July 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே போதை காளான் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் மன்னவனூர் கைகாட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 33) என்று தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் போதை காளான் இருந்தது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் காளான்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கஞ்சா, போதை காளான்களை விற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். இவர் மீது கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், போதை காளான் வைத்திருப்பதும், அதனை வாங்கி பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம் ஆகும். எனவே போதை காளான் வாங்கி பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story