புகையிலை விற்ற வாலிபர் கைது
புகையிலை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், நதியா மற்றும் போலீசார் நேற்று மாலை இடையன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பள்ளி அருகில் மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுக்களை விற்று கொண்டிருந்த திசையன்விளை அருகே தரகன்காட்டை சேர்ந்த சுடலைமணி மகன் நாராயணன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், புகையிலை மொத்த வியாபாரியான அவர், 104 கிலோ எடை கொண்ட 500 புகையிலை பாக்கெட்டுகளையும் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story