புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் வடக்கு பஜாரில் சோதனை நடத்தினர். அங்கு முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஆறுமுகநேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கு கடையில் இருந்த 228 புகையிலை பாக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


Next Story