கஞ்சா கடத்திய வாலிபர் கைது


கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x

கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் புகழூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில், ஒரு பிளாஸ்டிக் கவரில் 1½ கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா கடத்தி வந்ததாக புகழூர் செந்தூர்நகர் பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story