ரேஷன் அரிசியை பதுக்கி விற்ற வாலிபர் கைது
ரேஷன் அரிசியை பதுக்கி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் நகரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கரூர் தாந்தோணிமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாந்தோணிமலை சிவாஜிநகர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வெங்கமேட்டை சேர்ந்த பிரபு (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story