ஓடும் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி-செல்போன் திருடிய வாலிபர் கைது


ஓடும் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி-செல்போன் திருடிய வாலிபர் கைது
x

கரூரில் ஓடும் ரெயிலில் பயணியிடம் மடிக்கணினி-செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

மடிக்கணினி திருட்டு

சென்னை திருவேற்காடு பல்லவன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசன்னா (வயது 22). இவர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தி்ல் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ெரயிலில் சம்பவத்தன்று பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சேலம் வரை கண்விழித்து இருந்த பிரசன்னா பின்னர் தூங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் அந்த ரெயில் கரூரை தாண்டி திண்டுக்கல் செல்லும் வழியில் பிரசன்னா எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த பேக்கில் இருந்த மடிக்கணினி, செல்போன், ஏ.டி.எம். கார்டு, ரூ.500-ஐ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதுகுறித்து அவர் கரூர் ெரயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அதே ரெயிலில் பயணம் செய்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அகமது ஷரீப் (21) மடிக்கணினி, செல்போன், ஏ.டி.எம். கார்டு, ரூ.500-ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து அகமது ஷரீப்பை ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story