டிப்பர் லாரி திருடிய வாலிபர் கைது


டிப்பர் லாரி திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே டிப்பர் லாரி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஸ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரை சேர்ந்த தடிக்காரன் மகன் அன்பழகன் (வயது 32). இவருக்கு சொந்தமான டிப்பர் லாரி கடந்த 4-ந்தேதி எப்போதும்வென்றான் அருகே உள்ள கழுகலாபுரம் குடோன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், டிப்பர் லாரியை ஸ்ரீவைகுண்டம் தாலுகா இசவன்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முனியசாமி (39) திருடி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து டிப்பர் லாரி மீட்கப்பட்டது.


Next Story