கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது


கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
x

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு அமராவதி ஆற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக கரூர் மக்கள் பாதை பகுதியை சேர்ந்த இலியாஸ் (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story