வீடு புகுந்து மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


வீடு புகுந்து மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீடு புகுந்து மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கவுதம் (வயது 21). இவருக்கும் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெனோரிஸ் மகன் கார்லின் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக கார்லின் தனது நண்பர்களுடன் கவுதம் வீட்டிற்குள் நுழைந்து அவரது தாயாரை கம்பி மற்றும் கட்டையால் தாக்க முயன்று, கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த டி.வி. மற்றும் கெடிகாரம் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து கார்லினை கைது செய்தார்.


Next Story