வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது


வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது
x

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

காட்பாடி அருகே உள்ள மேல்பாடியை சேர்ந்த ஓம்கணேஷ் என்ற வாலிபர் கடந்த 6 மாதமாக 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை ஓம்கணேஷின் நண்பர் கருணா வீடியோவாக எடுத்துள்ளார்.

தற்போது அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, தனது காதலனிடம் வற்புறுத்தி உளளார். அதற்கு திருமணம் செய்ய மறுத்த ஓம்கணேஷ், திருமணம் செய்ய வற்புறுத்தினால் பாலியல் பலாத்கார வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஓம்கணேசை போலீசார் கைது செய்தனர்.


Next Story