ரூ.20 லட்சம் மோசடி வழக்கில் வாலிபர் கைது


ரூ.20 லட்சம் மோசடி வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி வழக்கில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 62) என்பவரின் மகள் தமிழரசி. முதுகலை என்ஜினீயரான இவருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழகாபுரத்தை சேர்ந்த பழனிவேல் மகன் கணேசன் மற்றும் இவருடைய மனைவி சாந்தி, மகன் பரத்குமார்(28), கணேசனின் நண்பர்கள் பார்த்தசாரதி, கேசவன் ஆகிய 5 பேரும் சேர்ந்து ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு வேலைவாங்கி தராமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழரசியின் தந்தை ஜெயவேல் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கணேசன், சாந்தி, பரத்குமார், பார்த்தசாரதி, கேசன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கணேசன் மகன் பரத்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story