சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர்  கைது
x

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன்(வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி அருகே தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் விரைந்து சென்று ஜெயகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு நீதிமன்றத்தின் மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story