வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது


வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் உடன் பணிபுரியும் மற்றொரு தொழிலாளி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது 8 வயது சிறுமியுடன் பேசி பழகினார்.

இதற்கிடையே அஜித்குமார் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஆசைவார்த்தை கூறி காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினாள்.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி கடந்த 25-ந் தேதி அஜித்குமாரை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அஜித்குமார் ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல் ஊட்டி கிளை சிறையில் உள்ள அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அஜித்குமார் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.


Next Story