சகோதரி வீட்டிற்கு வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை


சகோதரி வீட்டிற்கு வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை
x

சகோதரி வீட்டிற்கு வர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

மணப்பாறை:

காதல் திருமணம்

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த எண்டபுலி அருகே உள்ள களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் சத்தியமூர்த்தி(வயது 19). கேட்டரிங் முடித்துள்ளார். இந்நிலையில் இவரது சகோதரி, அவரது மாமா மகனை காதலித்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த சத்தியமூர்த்தி, சகோதரிைய சந்தித்து வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வர மறுத்ததால், அவரிடம் விஷம் தின்று விடுவேன் என்று சத்தியமூர்த்தி கூறிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில் நேற்று முன்தினம் விஷம் தின்று விட்டதாக சத்தியமூர்த்தி, தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story