விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 19). இவர் தனது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தர சொல்லி கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் சிறிது நாட்கள் கழித்து மோட்டார் சைக்கிள் வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இந்தநிலையில் தோட்டத்திற்கு சென்ற சரவணகுமார் திடீெரன அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். உடனே அவரை திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story