விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தேனியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த நாராயணன் மகன் முத்துக்குமார் (வயது 28). இவர், மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். உடல் நலக்குறைவால் கடந்த 3 மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். உடல் நலக்குறைவு மற்றும் வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் இருந்த அவர், கடந்த 2-ந்தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை நாராயணன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.