விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மணல்மேடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை
மணல்மேடு:
மணல்மேடு அருகே உடையூரை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் பிரவீன் (வயது26). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிரவீன் சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக் மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story