விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பண்ருட்டியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பண்ருட்டி
பண்ருட்டி தட்டாஞ்சாவடி, காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராஜசேகர்(வயது 33). சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நோய் குறையவில்லை. இதனால் மனமுடைந்த ராஜசேகர் வீட்டில் வைத்து விஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire