விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி ஊராட்சியை சேர்ந்த வைரபெருமாள் பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 34). இவரது மனைவி ஜோதிமணி. இந்நிலையில் வெங்கடேசுக்கு இருதய பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நேற்று மதியம் மதுவில் களைக்கொல்லி மருந்தை(விஷம்) கலந்து குடித்தார். இதையடுத்து சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story