விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
போடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29). தோட்டங்களுக்கு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி போடி அருகே அருங்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு மருந்து அடிக்க சென்றார். அங்கிருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அவர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து தோட்டத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story