விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கண்ணப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 35). இவர் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று ராஜா, மாவலிங்கை- கண்ணப்பாடி செல்லும் சாலையில் மதுபானத்தில் பூச்சி மருந்தை(விஷம்) கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story