வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குழித்துறை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி
குழித்துறை அடுத்த மடிச்சல் மாவறதலவிளையை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் தனீஷ் (வயது 23). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்று இருந்தார். ஆனால் அங்கு நல்ல வேலை அமையாமலும், கிடைத்த வேலைக்கு முறையாக சம்பளம் கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி கடந்த ஆகஸ்டு மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனீஷ் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனீஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் லதா களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story