வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ரெட்டிச்சாவடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்
நெல்லிக்குப்பம்
ரெட்டிச்சாவடி அடுத்த செல்லஞ்சேரியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 30). கடந்த ஒருவருடமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளங்கோவன் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story