வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 25). இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரம்யா (23) என்ற மனைவி உள்ளார். மதுகுடிக்கும் பழக்கமுடைய செந்தில்குமாருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரம்யா வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த செந்தில்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.