வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் கணகமுடிக்கார தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ராஜா (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ராஜா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?என போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story