வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சத்யராஜ்(வயது 26). இவர் வி.கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் சிமெண்டு சுரங்கப்பகுதியில் தார்பாய் கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சத்யராஜுக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு அடிக்கடி குடித்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் மறுநாள் காலை வீட்டில் பார்த்தபோது காணவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து செல்வராஜ் மற்றும் உறவினர்கள் அவரை தேடி உள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் சத்யராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.