வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மானூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

மானூர்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் - கட்டியநாடு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் ராஜன் (வயது 26). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவருக்கு நோய் குணமாக வேண்டி அவரது தாய்மாமா பாலகிருஷ்ணன் (40) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள ஆலயத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் தாழையூத்து அருகே தென்கலம்புதூரில் உள்ள உறவினர் சிவபெருமாள் என்பவரது வீட்டில் தங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story