வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர் கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 29). கேரளாவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்று விட்டனர். இதனால் மணிகண்டன் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தபோது நீண்ட நேரமாக கதவை தட்டியும் மணிகண்டன் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story