வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுபோதை சிகிச்சை மையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீழக்கரை அருகே உள்ள நத்தம்குளபதம் பகுதியை சேர்ந்தவர் தவ்பீக் ராஜா (வயது 29). டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் அடிக்கடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரின் மனைவி நவ்ரின்பாத்திமாவுக்கும் தவ்பீக் ராஜாவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கனவருடன் கோபித்து கொண்டு நவ்ரின்பாத்திமா ஏர்வாடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மகனின் நிலை குறித்து கவலைப்பட்ட தவ்பீக் ராஜாவின் பெற்றோர் ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகில் உள்ள குடிபோதை சிகிச்சை மையத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். கடந்த 2 வாரங்களாக சிகிச்சையில் இருந்து வந்த தவ்பீக் ராஜா மனவிரக்தி அடைந்து சிகிச்சை பெற்று வந்த தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நவ்ரின்பாத்திமா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.