வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தென்னிலை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

தூக்கில் தொங்கிய வாலிபர்

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள மீனாட்சி வலசு காலனியை சேர்ந்தவர் பூவேந்திர குமார் (வயது 30). இவர் அங்குள்ள ஒரு தறி பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர்.

இதனால் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மேலும் திருமணம் ஆகாத காரணத்தினால் பூவேந்திரகுமார் மனம் உடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.

வழக்கு

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்னிலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story