கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை


கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
x

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சதீஷ்(வயது 28). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கடன் வாங்கி வீடு வாங்கியுள்ளார். தற்போது கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சதீஷ் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story