குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை


குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை
x

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருவெறும்பூர்,ஆக.15-

திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே உள்ள வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி பாலமணி (21). இந்த தம்பதிக்கு சஞ்சய் (1) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் துவாக்குடி வடக்கு மலை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்சன் (40). இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று ஜான்சன் துவாக்குடி பெரியகுளம் அருகே உள்ள வயல் பகுதியில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story