அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் தற்கொலை


அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் தற்கொலை
x

அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் தற்கொலை

மதுரை

பேரையூர்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா, பனவடலிசத்திரம் ஆயால்பட்டியை சேர்ந்த பால்ராஜ்(வயது 39) வந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லை என அவர் கூறியுள்ளார்.

ஆனால் சிறிதுநேரத்தில் அவர் அங்குள்ள பல் மருத்துவ பிரிவுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சுகாதார நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பால்ராஜ் எதற்காக இங்கு வந்தார், என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story