வாலிபர் விஷம் குடித்து சாவு


வாலிபர் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 30 April 2023 12:30 AM IST (Updated: 30 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே வாலிபர் விஷம் குடித்து இறந்தார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள கணபதி சமுத்திரம் நாடார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜ்குமார் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர் வயிற்று வலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வீட்டில் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார். உடன் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story