மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சின்னசேலம்,
சின்னசேலம் சண்முகாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் குமரவேல்(வயது 34). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவி்ட்டு சொந்த ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் சிங்கப்பூர் செல்ல ஏற்பாடு செய்து வந்தார். இந்த நிலையில் சொந்த வேலைகாரணமாக தனது மோட்டார் சைக்கிளில் சின்னசேலத்துக்கு குமரவேல் சென்றார். அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். சின்னசேலம்-கூகையூர் சாலையில் தனியார் டைல்ஸ் கடை எதிரே சென்றபோது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி சரண்யா அளித்தபுகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.