கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
திருப்பத்தூர்
ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியை சேர்ந்தவர் ரித்திக் ரோஷன் (வயது 22). பட்டதாரியான இவர் நேற்று சோலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரித்திக் ரோஷன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் டவுன் போலீசார் ரித்திக் ரோஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story