மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்

மதுரை

பேரையூர்

பேரையூர் அருகே உள்ளது சின்னசிட்டுலொட்டி கிராமம். இங்குள்ள தோட்டம் ஒன்றில் அமைந்த மோட்டார் அறைக்கு பெயிண்டு அடிப்பதற்காக சேலத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story