விபத்தில் வாலிபர் சாவு
பரமக்குடி அருகே நடந்த விபத்தில் வாலிபர் இறந்தார்.
ராமநாதபுரம்
பரமக்குடி அருகே உள்ள தினைக்குளத்தை சேர்ந்தவர் சசிகுமார் என்பவரின் மகன் அபிஷேக் (வயது 18). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் சென்று விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அபிஷேக் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு மாயமான வாகனத்தையும் டிரைவரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story