விபத்தில் வாலிபர் படுகாயம்


விபத்தில் வாலிபர் படுகாயம்
x

விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

களக்காடு அருகே உள்ள கீழவடகரை, வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜ் (வயது 23). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மலையடிபுதூர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரது சகோதரர் தீமோத்தி (25) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன், காரை ஓட்டி வந்த சமூகரங்கபுரத்தை சேர்ந்த கருணாநிதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story